Priyanka Trivedi
Priyanka Trivedi

Raja Movie Actress Re-entry : தமிழ் சினிமாவில் சில நடிகைகள் வாய்ப்பு கிடைக்காமலும் திருமணம் அரசியல் காரணமாக விலகிச் சென்றனர் நாம் மிஸ் பண்ண நடிகைகளில் இவரும் ஒருவரே.

பெங்காலி மொழியில் தன் திரைப் பயணத்தை ஆரம்பித்த பிரியங்கா திரிவேதி. ராஜ்யம் படத்தின் மூலம் விஜயகாந்துக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

அதன்பின் அஜீத்துடன் ராஜா விக்ரமுடன் காதல் சடுகுடு உள்ளிட்ட படங்களில் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அந்த அளவிற்கு இவரது நடிப்பு பட்டையை கிளப்பியது.

அதன்பின் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில் தமிழில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அதனால் பெங்காலி கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.

சீக்கிரம் உன்னோட ஆட்டம் அடங்க போது – மீரா மிதுனுக்கு சனம் செட்டி எச்சரிக்கை!!!

கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்த பிறகு, சில காலம் நடிக்காமல் இருந்தவர் இப்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் உருவான ‘ஹௌரா பிரிட்ஜ்’ திரைப்படம் விரைவில் கன்னடத்திலும் தமிழிலும் வெளியாக உள்ளது. இதைத்தவிர பிக்பாஸ் பிரபலங்களான மகத், யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் பிரியங்கா திரிவேதி.

தமிழ் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் வெங்கடேஷ் இயக்குகிறார். மீண்டும் பிரியங்கா திரிவேதி தமிழ்சினிமாவில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.