Ajith Rajamouli
தல அஜித்தை இயக்க வேண்டும் என பிரம்மாண்ட இயக்குனர் ஒருவர் துடியாய் துடித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் நடைபெற்று வரும் வலிமை படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

இதற்கு முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்புகள் இன்று நடைபெற்று வந்த போது அஜித்தை ராஜமௌலி சந்தித்ததாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அவர் மீண்டும் அஜித்தை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாகவும் அதற்காகவே அடிக்கடி அஜித்தை சந்தித்து வருவதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் அடித்து கூறுகின்றன.

ராஜமௌலி கூட பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தமிழில் யாரை இயக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு அஜித்தின் பெயரையே அவர் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.