இன்று ‘காலபைரவா’ ராகவா லாரன்ஸ்க்கு ஹேப்பி பெர்த் டே: எளியோருக்கு உதவிகள்..

‘வாழ்வோம்.. வாழ வைப்போம்’ என்பதுபோல ‘வாழ்த்தினால் வாழ்த்தப்படுவோம்’ தானே. இப்ப எதுக்கு இந்த கருத்துன்னா.. எல்லாம் விஷயமாத்தான், நீங்களே பாருங்க..

பன்முகத்திறமை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி, அவரது 25-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்..

ராகவா லாரன்ஸ் நடிப்பில், கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். பல திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது.

நடன இயக்குநராக தன்னுடைய பயணத்தை சினிமாவில் துவங்கி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக பணியாற்றிய ராகவா லாரன்ஸ், ஒரு கட்டத்தில் தானே ஹீரோவாக களமிறங்கினார்.

காஞ்சனா சீரிஸில் இவர் அடுத்தடுத்த படங்களை இயக்கி, தயாரித்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ‘பென்ஸ்’ என்ற படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளார். ‘மாற்றம்’ அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவி வருகிறார். சமீபத்தில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கியுள்ளார்.

இதேபோல, தன்னுடைய பிறந்தநாளையொட்டி, விதவை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கியுள்ளார். இன்று, தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் ராகவா லாரன்சிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்குப்பட இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் தன்னுடைய 25-வது படத்தில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இந்தப் படத்தை நீலத்ரி புரொடக்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூப்பர் ஹீரோ படமாக உருவாகவுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாகவும் தயாராகவுள்ளது.

இந்நிலையில், இன்று ராகவா லாரன்சின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ‘கால பைரவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘புல்லட்’ படத்தின் புதிய போஸ்டரும் அவரது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவரது தம்பி எல்வின் முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் நிலையில், படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கால பைரவர் நலம் வாழ, வளம் கூட வாழ்த்துகள்.!

raghava lawrences 25th movie first look poster released
raghava lawrences 25th movie first look poster released