Raghava Lawrence

Raghava Lawrence Request : கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தேன். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக திருவாரூர் குன்னனூருக்கு வந்து பார்த்தேன்.

நாம் சென்னையில் கேள்விப் பட்டது போல் இல்லாமல் ஒரு தெருவில் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்தேன்.

நாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு அந்த பகுதி மக்களை மீட்டெடுக்க நாம் எல்லோரும் ஒன்றினைய வேண்டும்.

அவர்களுக்கு உதவ எல்லோரும் முன் வர வேண்டும் இது தான் என் தாழ்மையான வேண்டுகோள். இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸை போலவே அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜி.வி பிரகாஷ் என பல திரையுலக பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர்.

அதே போல நடிகைகளில் கஸ்தூரி, அறந்தாங்கி நிஷா ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.