லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராக இருப்பதாக லோகேஷ் பேசியிருந்தார். அதற்கான தன் லுக்கையும் லோகேஷ் மாற்றவுள்ளார்.
மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்து வந்த மிர்னா, தமிழில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது ‘ஜெயிலர்-2’ படத்திலும் நடித்து வருகின்றார். இவர், லோகேஷ் ஹீரோவாக நடிக்கப்போகும் படத்தில் கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், தற்போது ரச்சிதா ராம் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பதாக வரும் தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னதாக, அருண் மாதீஸ்வரன் ‘கேப்டன் மில்லர்’ படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து இளையராஜா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருந்தார். ஆனால், படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் துவங்க தாமதமாகி வருவதால், அதற்குள் லோகேஷ் கனகராஜை வைத்து ஒரு படத்தை இயக்கிவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார் அருண்.
