Rashi Khanna Interview

Raashi Khanna Interview : அஜித்தோட சிரிப்புல தான் விழுந்துட்டேன், அவர் மீது தான் எனக்கு கோலிவுட்டில் முதல் கிரஷ் என ராசி கண்ணா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா.

இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு படத்தை அடுத்து தற்போது விஷாலுடன் இணைந்து அயோக்கியா படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் பேட்டி அளித்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் கோலிவுட்டில் முதல் க்ரஷ் யார் மீது என கேட்டதற்கு தல அஜித் சார் தான் என கூறியுள்ளார்.

மேலும் அவருடைய சிரிப்பு அசத்தலாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதோடு நிறுத்தாமல் விஜய் தேவரகொண்டா படங்களில் லிப் லாக் கிஸ் கொடுப்பதில் தவறு இல்லை.

இன்றைய காலகட்டத்தில் லிப் லாக் கிஸ் எல்லாம் பெரிய விஷயமே இல்லை என கூறியுள்ளார்.

இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.