பைக் ரேஸில் தல அஜித்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Raai Laxmi in Bike : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். நடிப்பைத் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் நடிகை ராய் லட்சுமி.

பைக் ரேஸில் தல அஜித்துக்கு டஃப் கொடுக்கும் அஜித் பட நடிகை - தீயாக பரவிய வீடியோ

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது சமூக வலைதள பக்கத்தில் பைக்கை ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ராய் லட்சுமியா இது? தல அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போலயே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.