Pugazh Clarification About Valimai

தல அஜித்துடன் புகழ் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அவர் விளக்கமளித்துள்ளார்.

Pugazh Clarification About Valimai : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வரும் புகழுக்கு ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கமாக உயர்ந்து உள்ளது எனலாம்.

மேலும் அவருக்கு மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தன்னுடைய முடியை எடுக்க வேண்டும் எனக் கூறிய காரணத்தினால் நடிக்காமல் போனார்.

இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இவர் வலிமை படத்தில் தல அஜித்துடன் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து தற்போது இவர் பேட்டி ஒன்றில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அஜித்துடன் வலிமை படத்தில் நான் நடிக்கவில்லை. வெளியான தகவல் வெறும் வதந்தி தான்.

நான் சந்தானம் சாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.