பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு நக்கலாக பதிலளித்துள்ளார் புகழ்.

Pugazh About Participate in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிரபலமான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தந்தது.

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறீர்களா?? ரசிகரின் கேள்விக்கு நக்கலாக பதிலளித்த புகழ் - அப்படி என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!!

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய், சிவகார்த்திகேயனுடன் டான் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

தடைகளை தகர்க்கும் வெள்ளை விநாயகர் எப்படி தோன்றினார்?

மேலும் அமேசான் பிரைம் வீடியோ வெளியான எங்கே சிரி பார்ப்போம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று ரூபாய் 25 லட்சம் பரிசுத் தொகையை வென்றார். மேலும் இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

அவங்கள பத்தி கேள்விப்பட்டது வேற…ஆன? – Actress Gayathri Raghuram Speech | Thalaivi Press Meet

இதுகுறித்து ரசிகர்களுடைய பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறீர்களா எனக் கேட்டதற்கு நான் எங்க வீட்டுக்கு செல்கிறேன் என நக்கலாக பதிலளித்துள்ளார். இதன் மூலம் புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்பது தெரியவந்துள்ளது.