pugalendhi
அமமுகவின் வலது கரமாக செயல்பட்டு வரும் புகழேந்தி விரைவில் அக்கட்சியிலிருந்து வெளியேற இருக்கிறார் என செய்திகள் கசிந்துள்ளது.

Pugalendhi will quit from ammk soon – அதிமுக இரண்டாக உடைந்த போது சசிகலாவின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி டிடிவி தினகரன் பக்கம் நின்றார். தற்போது வரை அந்த கட்சிக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். பெங்களூரில் தங்கி இருக்கும் அவர் சசிகலாவை யார் சந்திக்க விரும்பினாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறார்.

TTV Dinakaran open talk
TTV Dinakaran open talk

இந்நிலையில், அமமுகவையும், தினகரனையும் அவர் விமர்சிக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளிடம் பேசு அவர் ‘பொறுமையாக இருங்கள். போகும் இடத்தில் நமக்கு மரியாதை இருக்கனும். நமக்கான எதிர்காலத்தை உருவாக்கிவிட்டுதான் அங்க போகனும். 14 வருடம் வெளியில் இருந்த தினகரன் ஊருக்கு காமிச்சது இந்த புகழேந்திதான். யோசனை செய்து ஒரு முடிவுகு வருவோம். நான் போகும் போது உங்களையும் அழைத்து செல்கிறேன்’ என அவர் பேசும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

அமமுகவிலிருந்து வெளியேற புகழேந்தி திட்டமிட்டிருப்பதால், அமமுக ஐடி விங்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது எனவும் செய்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே தங்க தமிழ்ச்செல்வன் வெளியே முடிவெடுத்த போதும் அவர் பேசிய ஆடியோவை அமமுக ஐடி விங் வெளியிட்டது எனக்கூறப்படுகிறது.

திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் ஆக வேண்டுமா? தெரிந்து கொள்வோமா?

எப்படி பார்த்தாலும் விஜயபாஸ்கர், தங்க தமிழ்ச்செல்வன், வி.பி கலைராஜன், இசக்கி சுப்பையா வரிசையில் புகழேந்தியும் விரைவில் அமமுகவில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.