Indian 2 Shooting Spot Accident

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவரும், இயக்குனரும் தயாரிப்பாளருமான PT செல்வகுமார் முதலமைச்சர் தனி பிரிவினருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்தார்.

லைக்கா ப்ரொடக்ஷனில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு EVP பிலிம் சிட்டியில் நேற்று நடந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அதிகமான எடையின்மை காரணமாக கிரேன் அறுந்து விழுந்து ஆர்ட் டைரக்டர் சந்திரன், அசிஸ்டன்ட் டைரக்டர் கிருஷ்ணா, தயாரிப்பு அசிஸ்டன்ட் மது 3 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள்.

திரைக்கு பின்னால் இருந்து மக்களை மகிழ்விக்கும் இந்த சினிமா கலைஞர்களுக்கு இப்படி ஒரு கோர விபத்து ஏற்பட்டிருப்பது ஆறுதல் சொல்ல முடியாத வேதனை அளிக்கிறது.

மேலும் 10க்கும் மேற்ப்பட்டோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களும் விரைவில் குணம் பெற வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.

இனிவரும் காலங்களிலாவது படப்பிடிப்பு தளங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் முன்னெச்செரிக்கை பாதுகாப்புகள் அவசியம் தேவை என்பதையும் வலியுறுத்துகிறேன். இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு உடனடியாக முதலமைச்சர் நேரில் சந்தித்து தக்க நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.