ஊரடங்கால் பாதிப்படைந்த இசைக் கலைஞர்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் உதவி செய்துள்ளது.

PT Selvakumar Helps to Musicians : கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் லயோலா பொறியியல் கல்லூரி இணைந்து கொரோனாமுழு ஊரடங்கால் பாதிப்படைந்த இசை, மேளம், நாதஸ்வரம், பாவைக்கூத்துகலைஞர்கள் 100 பேருக்கு அரிசி பைகள் மற்றும் மூலிகை கட்டுகள், முககவசம், கபசுர குடிநீர் போன்றவை லயோலா கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார், மாவட்ட மகளிர்திட்ட மேம்பாட்டு இயக்குனர் மைக்கேல் பெர்னான்டோ, கல்லூரி சேர்மன் நிக்கோலஸ், முதல்வர் டார்வின், கலப்பை இயக்க கலைப்பி நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் பெர்னாண்டோ” கிராமப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை அரசுசார்பில் கண்டிப்பாக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடும் முகாம்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் உள்ளது அல்லது உங்கள் வீட்டிற்கு அருகாமையில் சோதனை செய்ய வரும் நபர்களிடம் கேட்டால் கண்டிப்பாக தகவலை கொடுப்பார்கள் எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து நற்பணிகள் செய்து வரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பிடி செல்வகுமார் அவர்களை நாங்கள் பாராட்டுகிறோம்.

இந்த மாதிரியான நிகழ்வுக்கு அரசு கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். கல்லூரியின் சேர்மன் நிக்கோலஸ் பேசும்பொழுது” கிராமப்புற கலை நிகழ்ச்சிகள் என்னுடைய சிறுவயதில் நான் நிறைய கேட்டிருக்கிறேன். அதை கேட்டு வளர்ந்தவன் நான்! உங்களுடைய சேவைகளை என்னுடைய கல்லூரியில் கண்டிப்பாக கல்விக்காக தான் பயன்படுத்திக் கொள்வேன் . மேலும் லயோலாவுடன் இணைந்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வகுமார் அவர்கள் மிக வேகமாகவும் விரைவாகவும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. இது போல் மற்றவர்களும் உதவி செய்ய முன்வர வேண்டும்” என்று கூறினார்.

கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் பிடி செல்வகுமார் பேசுகையில் “நான் கலைத் துறையில் இருந்து வந்தவன்! கிராமப்புற கலைஞர்களின் வாழ்வாதாரமும் ஒரு முழுமூச்சோடு நீங்கள் பணியாற்றும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கான கலைநிகழ்ச்சிகள் இல்லாததால் நீங்கள் படும் துயரங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். அனைவருக்கும் சுத்தமான காற்று அவசியம் அதனால் நாம் இந்த நிகழ்வை கூட காற்றோட்டமான மலைப் பகுதியில் வைத்து சமூக விலகலோடு நடத்துகிறோம் அனைத்து கிராமிய கலைஞர்களையும் நான் மதிக்கின்றேன். உங்களுடைய ஆரோக்கியத்திற்காக தருகின்ற மூலிகைகளை குடி நீராகவோ ஆவி பிடித்தோ உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொருளாதார சூழ்நிலையில் மிகப்பெரிய நபர்களாக இருப்பவர்கள் பக்கத்தில் இருக்கும் சாமானியர்களுக்கு உதவ வேண்டும்.

எல்லோருமே வீட்டில் இருந்தால் யார் இந்த உதவிகளை செய்வது? எனவே இந்த கடினமான காலகட்டத்தில் கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்ற உங்களுக்கு செய்கின்ற உதவிகளை நான் ஒரு இறை சேவையாகவே பார்க்கின்றேன் என்று கூறினார். சமூக விலகலோடு காற்றோட்டமான மலைப்பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பயனடைந்த கிராமப்புற கலைஞர்களின் மனதை நெகிழச் செய்தது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.