Psycho Movie
முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக சைக்கோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

Psycho Movie Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த திரைப்படம் சைக்கோ. நேற்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களை தவிர மற்ற படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சியை தவிர மற்ற காட்சிகளுக்கு கூட்டம் குறைந்து விடும், அதிலும் ஹவுஸ் புல் என்பதெல்லாம் வாய்ப்பில்லாத ஒன்று தான்.

ஆனால் தற்போது இதனை சாத்தியாமாக்கியுள்ளது சைக்கோ திரைப்படம். நேற்று இரவு காட்சிக்கு பிரபல தியேட்டர்களில் ஒன்றான சங்கம் சினிமாஸில் உள்ள மூன்று ஸ்க்ரீனிலும் சைக்கோ திரைப்படம் ஹவுஸ் புல்லாக ஓடியுள்ளது.

இது தான் படத்திற்கு கிடைத்த வெற்றி என ரசிகர்களும் படக்குழுவினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.