300 கோடியை தாண்டி பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்1”. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் 80 கோடி ரூபாய், 2 வது நாளில் 70 கோடி ரூபாய் என வசூல் வேட்டையாடிய இந்த திரைப்படம் மூன்று நாள் முடிவில் உலகம் முழுவதும் சேர்த்து மொத்தமாக 230 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என சமீபத்தில் பாக்ஸ் ஆபிஸ் தகவல் வெளியிட்டு இருந்தது.

300 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்த பொன்னியின் செல்வன்…!!! அதிர வைக்கும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!.

அது மட்டுமல்லாமல் இந்த படம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் நல்ல வசூல் வேட்டையாடி வருகிறது. காலாண்டு விடுமுறை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை என இந்த வாரம் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் இப்படம் 6 நாட்களில் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் ரூ.123 கோடி, கேரளாவில் ரூ. 17 கோடி, ஆந்திரா-தெலுங்கானா ரூ. 19 கோடி, கர்நாடகா ரூ.18 கோடி, வட இந்தியா ரூ.18 கோடி என உலகம் முழுவதும் மொத்தம் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் குறைந்த நாளில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த முதல் படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன்1 திரைப்படம் பெற்றுள்ளது.