IMDb வெளியிட்ட மிகவும் பிரபலமான டாப் 10 இந்திய திரைப்படங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், இதே சூட்டோடு பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் ஐஎம்டிபி-ன் மிகவும் பிரபலமான 10 இந்திய திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதை படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. அது தற்போது வைரலாகி வருகிறது.