பொன்னியின் செல்வம் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் குந்தவை கதாபாத்திரத்தில் பல்வேறு தோற்றங்களின் போட்டோ ஷூட் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்திருந்த இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். இதன் வரவேற்பை தொடர்ந்து பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது . இந்நிலையில் படத்தின் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நடிகை திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரத்திற்காக பல்வேறு தோற்றத்தில் எடுக்கப்பட்டிருந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.