நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Property Value of Actress Samantha : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். நான்காவது திருமண நாள் வருவதற்கு முன்பாகவே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தமிழகத்தில் 30,000 சிறப்பு முகாம்கள் : வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை வேண்டுகோள்

சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள நோ சொன்னதே இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என தற்போது வரை கூறப்பட்டு வருகிறது. மேலும் இருவரும் ஒரு மனதாக பிரிந்த நிலையில் சமந்தாவுக்கு ரூபாய் 800 கோடி ஜீவனாம்சம் கொடுக்க நாகர்ஜுனா குடும்பம் முன் வந்ததாகவும் ஆனால் சமந்தா நானே நன்றாக சம்பாதிக்கிறேன். ஆகையால் ஜீவனாம்சம் வேண்டாம் என கூறியதாக தகவல் பரவியது.

Doctor Movie Public Review | FDFS | Sivakarthikeyan | Priyanka Mohan | Anirudh | Nelson Dhilip Kumar

இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 84 கோடி எனவும் தன்னிடம் போதுமான அளவு சொத்துகள் இருப்பதால் அவர் ஜீவனாம்சம் என கூறியதாகவும் கூறப்படுகிறது. சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.