கவி நடித்துள்ள லிப்ட் படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

Producer About Lift Release : தமிழ் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்‌. அதன் பின்னர் இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் வேட்டையனாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

இதனையடுத்து வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தடம் பதித்தார். பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

சென்னையில், நாளை முதல் ஆகஸ்ட் 15-வரை கிரிக்கெட்

அதற்கு அடுத்ததாக இவர் லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் பற்றி எந்தவித தகவலும் வெளிவராமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இது குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். திரையரங்குகள் திறக்கவில்லை என்ற காரணத்திற்காக அமைதியாக இருக்கிறோம். ‌‌‌‌‌

என்னுடைய மகன் உயிர் பிழைக்க விஜய் தான் காரணம் – பிரபல நடிகர் உருக்கம் | Viral Video | LatestNews |HD

படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் ஆகியவற்றை இப்போது வெளியிட்டால் அது பழையதாகி விடும் என்ற காரணத்திற்காகத்தான் எதையும் வெளியிடாமல் அமைதியாக உள்ளோம். லிப்ட் திரைப்படம் கவின் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைசாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. காலதாமதத்திற்கு மன்னிக்கவும், பொறுமையாக காத்திருங்கள் என தெரிவித்துள்ளார். ‌‌ ‌‌