Pro Kabaddi U Mumba beat Gujarat
Pro Kabaddi U Mumba beat Gujarat

Pro Kabaddi U Mumba beat Gujarat – புதுடெல்லி : நேற்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதினர்.

இரு அணிகளுமே சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். ஆட்டத்தின் முதல் பாதியில் 17- 14 என மும்பை அணி முன்னிலை பெற்றது.

அடுத்து, இரண்டாம் பாதியில் கடும் சவாலாக குஜராத் அணி வீரர்கள் விளையாடினர். பெரும் முயற்சி செய்தும் இரண்டாம் பாதியிலும் மும்பை அணியே முன்னிலை பெற்றது.

இறுதியில் மும்பை அணி 36 – 26 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை பெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் டெல்லி அணியும் புனே அணியும் மோதினர். அதில் டெல்லி அணி 35-24 என புனே அணியை வீழ்த்தியது.

மேலும் ஏ பிரிவின் தரவரிசையில், மும்பை அணி முதல் இடத்தில் உள்ளது. குஜராதை வென்றதன் மூலம் மும்பை அணி தனது பதிமூன்றாவது வெற்றியை பெற்றது.

தொடர்ந்து முன்பை அணி முதல் இடத்தை தக்கவைத்து இருப்பது குறிப்பிடதக்கது. குஜராத், புனே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது.

பி பிரிவில் பெங்களூரு அணி 58 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மற்றும் பாட்னா, பெங்கால் அணிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 33 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.