சிம்பிளாக கல்யாணம் முடிந்த கையோடு பிரியங்கா நல்காரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி.

இந்த சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது காதலனை கோவில் வைத்து சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவர் சாப்பாடு ஊட்டி விடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.