Priya Bhavani Shankar Pair With Dhanush

தனுசுக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Priya Bhavani Shankar Pair With Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான கர்ணன், ஜகமே தந்திரம் படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்தில் நடித்து வருகிறார். ‌‌

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உத்தம புத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட குத்துச்சண்டை வீரர், வெளியேற மறுத்து இன்று போராட்டம்..

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகன்னா மற்றும் இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராசி கண்ணா அதைத் தவிர்த்து மற்ற இரண்டு நடிகைகளில் ஒருவராக பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என கூறப்படுகிறது.

வெளியான Beast Release தேதி – மகிழ்ச்சியில் Vijay ரசிகர்கள்..! | Pooja Hegde | Nelson Dilipkumar |HD

விஜய் டிவி சீரியலில் நாயகியாக நடித்து வந்த இவர் மேயாதமான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.