தளபதி 65 பட நாயகி கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

Pooja Hegde Tested COVID19 Possitive : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இது என்ன தளபதி 65 நாயகிக்கு வந்த சோதனை - ரசிகர்கள் அதிர்ச்சி.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜார்ஜாவில் முதல் கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து படக்குழு சென்னை திரும்பியது. இந்த நிலையில் தளபதி 65 பட நாயகி பூஜா ஹெக்டே கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.