பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.

தாய்லாந்தில் செட் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர், இந்த படத்தில் ஜெயம் ரவி, சீயான் விக்ரம், கார்த்தி, பார்த்திபன், ரியாஸ் கான் மற்றும் பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தன.

தற்போது ஜெயராமும் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் கலந்து கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன.

மேலும் அவர் ஆழ்வார்க்கடியான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.