பொன்னியன் செல்வன் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணியை இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதன் அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு இருந்தது.

அதன்படி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “அக நக” என்னும் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. குந்தவைக்கும், வந்திய தேவனுக்கும் இடையேயான காதலை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.