பொன்னியன் செல்வன் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் இன்று முதல் இலவசமாக பார்க்கலாம் என்ற அறிவிப்பு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இன்று முதல் இலவசம்!!…PS1 ஓடிடி அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்!.

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தளத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வெளியானது. ஆனால் அதனைப் பார்க்க 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இப்படத்தை இன்று முதல் இலவசமாக பார்க்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.