தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சர்கார் படம் தீபாவளிக்கு சரவெடியாக வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும் போது ஒரு வேலை நான் முதல்வரானால் ஊழலை ஒழிப்பேன், லஞ்சத்தை ஒழிப்பேன் என கூறினார்.

விஜயின் இந்த பேச்சை அடுத்து பேசிய பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விஜய் ஊழல்வாதி யார் என்பதை கை காட்டி கூறினால் அவரை மாலை அணிவித்து வரவேற்பேன் என கூறியுளளார்.

மேலும் அனைவராலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவாக ஆகி விட முடியாது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் என கூறியுள்ளார்.