பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கேற்க போகும் செய்தி வாசிப்பாளர் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் ஆறாவது சீசன் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஆறாவது சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதுவரை சில போட்டியாளர்களின் பெயர்கள் அடிபட்டுள்ள நிலையில் தற்போது பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து வெகு விரைவில் பிக் பாஸ் சீசன் ஒளிபரப்பாக தொடங்கும் என தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.