பொண்ணுங்க எல்லாம் அடக்கமா இருக்கணும் என்று தயவு செய்து நம்பிடாதீங்க..நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!

Web Ads

பொண்ணுங்க எல்லாம் அடக்கமா இருக்கணும்னு சொல்றது தயவுசெய்து நம்பிடாதீங்க என்று கூறியுள்ளார்.

please don't believe that girls should be modest..actress keerthy suresh open talk..!
please don’t believe that girls should be modest..actress keerthy suresh open talk..!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த மாமன்னன் போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் பெண்களின் தைரியம் குறித்து பேசி இருக்கிறார்.

Web Ad 2

அதில் பொண்ணுங்கனா அடக்கமா இருக்கணும்ன்றது தயவுசெய்து நம்பிடாதீங்க பொண்ணுங்களா கண்ணுங்களா என்று கூறியுள்ளார். பெண்கள் என்றால் எதைக் கொடுத்தாலும் அதை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பார்கள் அதை நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி என்று சொல்லி இருக்கிறார்.

இது மட்டுமில்லாமல் ரஜினி சார் ஒரு டயலாக் சொல்லுவாரு வியாதி இல்லாத உடம்பும் வேதனை இல்லாத மனதும் இருந்தா அதுதான் மிகப்பெரிய சொத்து என்று அதேபோல் எல்லோரும் ஆரோக்கியமா இருங்க என்று கூறியிருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

please don't believe that girls should be modest..actress keerthy suresh open talk..!
please don’t believe that girls should be modest..actress keerthy suresh open talk..!