Petta Second Single

Petta Second Single : பேட்ட படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் நாளை வெளியாக உள்ளது. இதற்கான ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று ( டிசம்பர் 7 ) வெளியாக உள்ளது. இதற்கான ஸ்னீக் பீக் வீடியோவை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் பாடல் தில்லு முள்ளு படத்தில் ஸ்டேடியத்தில் ரஜினிகாந்த் செய்த கலாட்டாக்களை போல உருவாகி இருப்பதாக அனிருத் வெளியாகியுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

முதல் சிங்கிள் டிராக்கான மரண மாஸ் பாடலை போலவே இந்த பாடலையும் தெறிக்க விட்டு கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.