சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் சென்சார் அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 10 தல திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.