பத்து தல திரைப்படத்தின் ஆடியோ லஞ்சில் உணர்ச்சிகரமாக பேசிய சிம்புவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தலை திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபடி இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

அதில் மாசான நியூ லுக்கில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு உணர்ச்சிகரமாக பேசிய வீடியோ இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. அதில் அவர், ரசிகர்கள் இனி எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனிமே நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க. நான் தமிழ் சினிமா, தமிழ் மக்களை பெருமை படும் வகையில் நிச்சயம் வருவேன். என் ரசிகர்களை இனிமேல் தலை குனிய விடமாட்டேன். என உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.