பாபநாசம் திரைப்படம் கொரியன் மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரை உலகில் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவரது நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து நல்லா வரவேற்பை பெற்றிருந்த பாபநாசம் திரைப்படம் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

அதாவது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த திருஷ்யம் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி இருந்தது. இப்படம் தமிழ், மலையாளம் மட்டுமின்றி இந்தியிலும் திரிஷ்யம் என்ற பெயரில் அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து இருந்தது.

தற்போது இப்படத்தின் கதையை கொரிய மொழியில் படமாக்குவதற்கு அறிவிப்பு வந்துள்ளது. அதாவது ஹாலிவுட்டில் பல ஹிட் படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் கிம் ஜீ வான் இந்த படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது. பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிம் ஜீ வான் இந்த அறிவிப்பை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.