கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு கூப்பிட சொல்லி தனம் சொல்ல மூர்த்தி கோபப்பட்டு உள்ளார்.

Pandian Stores Episode Update 29.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் ஐஸ்வர்யா இட்லி கடை போட்டிருப்பதைப் பார்த்து விட்டு தனது வீட்டுக்குள் நுழைகிறார் கஸ்தூரி. ஐஸ்வர்யாவை நான் எப்படி எல்லாம் வாழ வைக்கணும்னு ஆசை பட்டேன் அதை இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட அது எனக்கு வருத்தம்தான். ஆனால் சின்னஞ்சிறு சிறுங்க இப்படி கஷ்டப்படும்போது மனசு கேட்கல. அதுக தப்பு பண்ணியிருந்தாலும் கஷ்டப்படும் போது அரவணைக்க வேண்டியது நம்ப தானே. அவங்கள வீட்டுக்குள்ள கூப்பிடலாம்ல என மூர்த்தியிடம் கூறுகிறார் கஸ்தூரி. உடனே தனம் நானும் இத பத்தி உங்ககிட்ட பேசணும்னு இருந்தேன் மாமா என சொல்கிறார்.

சிந்துவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் : ஆறுதலாய் தேற்றுகின்றனர், எனர்ஜி நெட்டிசன்கள்..

கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டுக்கு கூப்பிட சொல்லும் தனம்.. மூர்த்தி கொடுத்த பதில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட்

ஆனால் மூர்த்தி அவன் கஷ்டப்படுறது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அவனுக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரியணும். அவங்கள வீட்டுக்குள்ள கூப்பிட்டு ரெண்டு பேரையும் படிக்க வைக்கிறது ஒன்னும் பெருசு இல்ல. ஆனால் அதற்குப் பிறகு அவனுக்கு ஒன்றுமே தெரியாமல் போய்விடும். அது அண்ட் ஐஸ்வரியா பொண்ணுக்கும் மரியாதையா இருக்காது. அவன் வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சு கட்டும். சொந்தக் கால்ல நிக்க கத்துகட்டும் என கூறுகிறார். மீண்டும் தனம் அதுக்கு இல்ல மாமா என ஆரம்பிக்க உடனே மூர்த்தி நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா என வாயை அடைத்து விடுகிறார். பிறகு அவர் கடைக்கு கிளம்பிவிடுகிறார். கஸ்தூரி என்ன தனம் நீ சொல்றதை நீ அண்ணன் கேட்க மாட்றாரு என சொல்ல மீனா ரெண்டு பேருக்கும் நடுவுல கொடுத்து விடுகிறீர்களா என கூறுகிறார். தனம் இந்த விஷயத்துல மாமா எடுக்கிறது தான் முடிவு நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை என கூறி விடுகிறார்.

பிறகு கிச்சனில் முல்லை சமைக்க தயார் செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தனம் என்ன சமைக்கப் போகிற முல்லை என கேட்க மீனா வேறென்ன இட்லி இல்லனா பூரி தான் என கூறுகிறார். உடனே தனம் இட்லி நல்ல சாப்பாடு இல்லையா எனக் கேட்க நான் அப்படி சொல்லல அதை தவிர்த்து நம்ம வீட்டுல வேற என்ன செய்யப் போகிறோம் என கூறினேன் என்று சொல்கிறார். ஐஸ்வர்யாவை பற்றி தன பேச முல்லை கடுப்பாகிறார். நீ ஏன் அவளை பத்தி பேசினா கடுப்பாகிற என கேட்க அவளோ எனக்கு பிடிக்கல அவளும் அவ மூஞ்சியும் என கூறுகிறார். ‌‌பிறகு தனம் அவங்ககிட்ட இட்லி வாங்கிக்கலாம் என கூறுகிறார். ஆனால் முல்லை வேண்டாம் என கூறுகிறார். நீ போய் வாங்கிட்டு வா என தனம் சொல்ல நான் எல்லாம் போக மாட்டேன் என முல்லை கூறிவிடுகிறார். மீனா எங்க ஏன் சூப்பர் மார்க்கெட்ல வேலைக்கு போகல என கேட்க தனமும் எனக்கும் அது தான் தெரியல என கூறுகிறார். சொந்தமா பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைச்சு இருப்பாங்க போல என மீனாவே சொல்லிக் கொண்டு நான் போய் வாங்கிட்டு வரேன் என செல்கிறார்.

பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away | RIP

கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டுக்கு கூப்பிட சொல்லும் தனம்.. மூர்த்தி கொடுத்த பதில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட்

மீனா அங்கு போய் இட்லியை வாங்கிக் கொண்டு பிறகு நீங்க எதுக்கு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு போகல என கேட்கிறார். என்னப்பா ஒன்னும் சொல்லலையா என ஐஸ்வர்யா கேட்கிறார். கையில எதுவும் சொல்லலையா என கண்ணன் கேட்கிறார். இருவரும் எதுவும் சொல்லல என மீனா சொல்ல கண்ணன் ஐஸ்வர்யாவை உண்மையை சொல்ல விடாமல் தடுத்து விடுகிறார். பிறகு மீனா இட்லியை வாங்கிக்கொண்டு எவ்வளவு என கேட்க நீங்களா கொடுங்க என ஐஸ்வர்யா கூறிவிடுகிறார். அப்படினா கண்ணுக்குள்ள வெச்சிக்கோ சேர்த்து தருகிறேன் என மீனா சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார்.

இந்தபக்கம் மூர்த்தி கடையில் ஆழ்ந்த யோசனையில் இருக்கும் போது அதனை பார்த்த ஜீவா என்னையா பண்ணிட்டு இருக்கீங்க கண்ணனைப் பற்றியா என கூறுகிறார். ஆமாம் என மூர்த்தி சொல்ல நானும் அதைப் பற்றித்தான் யோசிச்சுட்டு இருக்கேன். அவன் வீட்டுக்குள்ள கூப்பிடலாம் இல்ல என ஜீவா கூற மூர்த்தி முறைக்க இத்துடன் பாண்டியன் ஸ்டோர் எபிசோட் முடிவடைகிறது.