மீனாவின் அப்பாவால் வீட்டில் பூகம்பமே வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pandian Stores Episode Update 23.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை பக்கத்தில் ஒரு வேலையாக வந்த மீனாவின் அப்பா கார் பழுதாகி விட்டதால் அதனை ரெடி செய்து கொண்டு வருமாறும் அதுவரை நான் மாப்பிள்ளை கடையில் இருக்கிறேன் எனக் கூறிவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு செல்கிறார்.

வேர்ல்டு கப் மேட்ச் : வங்காளதேசம் கனவு நிறைவேறியது : ஆடுகள விவரம்..

மீனாவின் அப்பாவால் வீட்டில் வெடிக்கப் போகும் பூகம்பம் - பாண்டியன் ஸ்டோர் இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்

மூர்த்தி பாப்பாவை பார்க்க வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் கதிர் கட்டிட வேலைகளை கவனிப்பதற்காக குடோனில் இருக்கிறார். இங்கே ஜீவா மட்டும் தனியாளாக கடையில் இருப்பதை பார்த்த ஜனார்த்தனன் மாப்பிள்ளை மட்டும் தனியாக கஷ்டப்படுகிறார் என்று கவலைப்படுகிறார். ஜீவாவிடம் உங்க அண்ணன் மூர்த்தி கடையை கட்டிய பிறகு போய் குழந்தையை பார்க்கலாம்ல நீங்க ஏன் தனியாக இங்கே கஷ்ட படுறீங்க? கட்டிட வேலையை மேற்பார்வை பார்ப்பதற்காக ஒரு நாள் முழுக்க ஒரு ஆள் இருக்கணுமா? கதிர் கொஞ்ச நேரம் இருந்துட்டு கடையில் வந்து வேலை பார்க்கலாம்ல. எவ்வளவு நேரம் இங்க ஒரே ஆளா கஷ்டப்படுவீங்க என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

கட்டிட வேலை நடக்கும் இடத்தில் கதிர் வேலை செய்ய முல்லை நீங்க எதுக்கு இதெல்லாம் செய்யறீங்க என தடுக்க நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு என முல்லையை வீட்டுக்கு அனுப்ப கூட்டி வருகிறார் கதிர். அந்த நேரத்தில் முல்லை நான் வீட்டிற்கு போக மாட்டேன் கொஞ்ச நேரம் இருந்துட்டு தான் போவேன் என அடம்பிடிக்கிறார். இந்த நேரத்தில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஜனார்த்தனன் வந்துவிடுகிறார். அங்க மாப்பிள்ளை கடையில தனியா கஷ்டப்பட்டு இருக்காரு. இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்காங்க என புலம்புகிறார். அதன்பிறகு கதிரிடம் பேசிவிட்டு முல்லையை நானும் வீட்டுக்கு தான் போகிறேன் வா என அழைக்கிறார். நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன்.. நீங்க போங்க சித்தப்பா நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன் என சொல்கிறார். தனம் புள்ளை பெத்துருக்கு, மீனா குழந்தையை வைத்துக்கிட்டு தனியாக என்ன பண்ணும் என முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார்.

Nayanthara-க்கு 7 Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech

அப்போது மூர்த்தி குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க பக்கத்தில் தனம் உட்கார்ந்து கொண்டிருக்க மீனா துடைப்பத்தை எடுத்துக் கொண்டு கூட்ட வருகிறார். இதனை பார்த்த தனம் நீ பெருக்காத நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்கிறார். அதற்குள் பாப்பா அழவே அவனுக்கு பால் கொடுத்து விட்டு வருவதாக உள்ளே செல்கிறார். கயலை கீழே உட்கார வைக்க கயல் குப்பையை எடுத்து வாயில் வைத்துக் கொள்கிறார்.

இதனால் கயலை தூக்கிக் கொண்டு மீனா வீட்டை பெருக்க அந்த நேரத்தில் அவருடைய அப்பா வந்து விடுகிறார். பின்னர் முல்லை வந்து குழந்தையை இடுப்புல வச்சுக்கிட்டு நீங்க எதுக்கு இந்த வேலையை பார்க்கறீங்க என துடப்பத்தை வாங்கிக் கொள்கிறார். அதன் பின்னர் முல்லை கயலை தூக்கிக்கொண்டு பின் பக்கம் செல்ல மீனாவின் அப்பா நீ, மாப்பிள, கயல் பாப்பா இவங்க தான் உன்னுடைய குடும்பம். எல்லாரும் சேர்த்து என்னுடைய குடும்பம் இல்ல. இதுதான் சரியான நேரம் உட்கார்ந்து யோசி என சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார் ஜனார்த்தனன். ‌

பிறகு மீனா கயலுடன் ரூமில் இருக்க அப்போது உங்க அப்பா அண்ணன் புள்ளைய தூங்க வைத்துவிட்டு தான் வருவான் என சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ஜீவா வந்து கதவை சாத்திவிட்டு என் புள்ள கிட்ட என்ன போட்டு கொடுக்கிறியா என கேட்கிறார். கயலை தூக்கி கொஞ்சி விட்டு சாப்பிட்டாலா எனக் கேட்கிறார். சாப்பிட்டுட்டா என கூறிய மீனா இப்போல்லாம் யாரும் கயலை கண்டுகொள்வதில்லை. மூர்த்தி மாமா வரும்போது கயல் என சத்தம் போட்டுக்கிட்டே தான் வருவார். இப்போ எல்லாரும் அவன் என்ன பண்றான் அவன் தூங்கிட்டானா என கேட்டுக் கொண்டு தான் வருகிறாங்க இந்த பாப்பாவ எல்லோரும் மறந்துட்டாங்க என கண்கலங்கி அழுகிறார். நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் பார்க்கிறோம். ஆனால் உங்க அண்ணன் அண்ணி அப்படி பார்க்கிறது இல்லை என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.