மூர்த்தியை கடுப்பாக்கியுள்ளார் ஐஸ்வர்யா. நாளுக்கு நாள் இவர்கள் அலப்பறை அதிகமாகி கொண்டே செல்கிறது.

Pandian Stores Episode Update 12.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் ஐஸ்வர்யாவை பார்ப்பதற்காக வெளியே காத்திருந்தார் தனம். அவர்கள் இருவரும் வந்தது என்ன சாப்டீங்க.? நாங்க இட்லி வாங்கி வந்திருக்கும் அங்கே என்ன இட்லியா என கேட்டார். அதன் பின்னர் கதிர் தனத்தை கிண்டல் அடித்தார். உடனே உள்ளே போகலாம் என தனம் கூற அதற்குள்ள நடந்து முடித்தாச்சா என கதிர் கூறினார். குளிருற மாதிரி இருக்கு என சாக்குபோக்கு சொல்லி விட்டு கிளம்பினார் தனம்.

நள்ளிரவில் திடீரென கரண்ட் கட்டாக மீனாவும் கயலும் எழுந்து கொண்டனர். காத்து வரவில்லை என ஜீவாவையும் எழுப்பிக்கொண்டு வெளியே வந்தனர். ஜீவாவை ஈபி ஆபீஸ்க்கு போன் செய்யுமாறு மீனா கூற அவரும் ஃபோன் செய்ய லைன் கிடைக்கவில்லை. எதிரே இருந்த கண்ணன் நான் ஃபோன் பண்ணிட்டேன் இன்னும் அரை மணி நேரத்தில் கரெக்ட் வந்துவிடும் என கூறினார். புழுக்கம் தாங்க முடியாமல் கயல் அழுது கொண்டே இருக்க கண்ணன் விசிலடித்து கயல் பாப்பாவை சிரிக்க வைத்தார்.

மூர்த்தியை கடுப்பாக்கிய ஐஸ்வர்யா.. தாங்க முடியாத அலப்பறை - பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் அப்டேட்

மறுநாள் விடிந்ததும் மூர்த்தி கதிரிடம் இந்த வண்டி பிரச்சனை பண்ணுகிறது என்ன ஏது என பார் என்று கூறினார். இந்த நேரத்தில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் எதிரில் டீ குடித்துக் கொண்டிருக்க டீ குடிக்கிறீங்களா பெரிய மாமா என கேட்டார். உங்க வீட்டு டீ மாதிரி இஞ்சி தூக்கலா போட்டு இருக்காது டீ டீ மாதிரி இருக்கும் என கூறினார். அதுமட்டுமல்லாமல் சின்னமாமா நீங்களாவது குடிக்கிறீங்களா என கதிரை கேட்டார். கடுப்பான மூர்த்தி கதிரையும் மீனாவையும் உள்ளே வரச் சொல்லிவிட்டு உள்ளே கிளம்பினார்.

அதிரடி ஆட்டத்தால, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துட்டார் நம்ம ‘தல’ : டோனி ரசிகர்கள் சரவெடி

கிச்சனில் தனம் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும் என முல்லையிடம் கூறுகிறார். மீனா உள்ளே வந்து ஐஸ்வர்யா செய்த வேலையை கூறுகிறார். மாமா ரொம்ப கோவமா போனாரா என தனம் கேட்க அதெல்லாம் இல்ல லைட்டா தான் என கூறுகிறார். பின்னர் மீனா தனம் வேலை செய்யச் சொன்னதால் மூக்கால் அழுது கொண்டே வேலை செய்கிறார். இந்த நேரத்தில் கயல் அழுவ இதுதான் சாக்கு என கிளம்பிவிடுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட்.

நானும் SUPER STAR ஆகி இருப்பேன்., என்னோட அம்மாதான் தடுத்துட்டாங்க – Abirami Ramanathan.! | Latest HD