அப்பாவின் பெயரை வைக்க முடிவு செய்து கடைசியில் திட்டத்தை அப்படியே மாற்றி விட்டனர்.

Pandian Stores Episode Update 06.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் பாரம்பரிய தொட்டிலில் குழந்தையை போட விடாமல் புதிய தொட்டிலில் குழந்தையைப் போட்டு பெயர் வைத்துள்ளனர்.

கந்த சஷ்டி : விரதமும் பலன்களும்.!

குழந்தைக்கு பாண்டியன் என பெயர் வைக்க வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்திருந்த நிலையில் கஸ்தூரி, தனத்தின் அம்மா மற்றும் ஜகா ஆகியோர் பாண்டியன் என்பது ஜாதக பெயராக இருக்கட்டும் கூப்பிட வேறு பெயர் வைக்கலாம் என கூறினர். கஸ்தூரியின் ஏதேதோ பெயரை பரிந்துரை செய்ய கடைசியில் தனம் அத்தையின் பெயரையும் சேர்த்து வைக்கலாம் என கூறினார்.

Annaatthe விட Enemy நல்லா இருக்கு – Enemy Day 2 Public Review | VIshal, Arya, Mirnalini Ravi | HD

பிறகு லட்சுமி பாண்டியன் நல்லா இருக்காது என சிலர் கூற கதிர் லட்சுமணன் பாண்டியன் என வைக்கலாம் என ஐடியா கூறினார். பிறகு முல்லை லஷ்மண பாண்டியன் என வைக்கலாம் என கூற அதையே பெயராக தேர்வு செய்துவிட்டனர். அம்மா அப்பாவின் பெயரை சேர்த்து குழந்தைக்கு வைக்க மூர்த்தி சம்மதம் தெரிவித்து விட்டார். பிறகு அனைவரும் லட்சுமண பாண்டியன் என குழந்தைக்கு பெயர் வைத்தனர்.

அதன்பிறகு மீனா கயலை தூக்கிக் கொண்டு ரூமிற்கு சென்று விட்டார். அதன்பிறகு அனைவரும் சாப்பிட அமர்ந்துவிட்டனர். மீனா தெருவில் சென்று உட்கார அப்போது கண்ணன் வந்து குழந்தையை பார்க்க வேண்டும் கொஞ்சம் தூக்கிட்டு வந்து காமிங்க என கேட்டார். குழந்தை பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கஸ்தூரியை தனம் சாப்பிட அனுப்பிவிட்டு அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மீனா வர தனத்தை உள்ளே அழைக்க அவர் உள்ளே சென்று விட்டார்.

இதுதான் சந்தர்ப்பம் என மீனா குழந்தையை தூக்கிக்கொண்டு கண்ணனிடம் காண்பிக்க சென்று விட்டார். கண்ணன் குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டு இருக்க இங்கே குழந்தையை காணவில்லை என தனத்தின் அம்மா கஸ்தூரி அழைத்து கேட்க கஸ்தூரி தனம் இருந்தார் என சொல்ல பிறகு தனம் மீனா தான் பக்கத்திலிருந்த என கூற ஜீவா ரூமிற்குள் சென்று பார்க்க மீனா அங்கு இல்லை. மீனாவும் குழந்தையும் எங்க போனாங்க என வீட்டில் உள்ளவர்கள் பதற இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.