pa ranjith upcoming movie update
pa ranjith upcoming movie update

பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவரது இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியானது.

இதில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி,பிரீத்தி கரன், டேனியல் கால்டகிரோன்,வேட்டை முத்துக்குமார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பிலும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பிலும்,உருவாக உள்ள ஜெர்மன் என்கிற படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளாராம்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.