விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
ஆனால் படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. ரிலீசிக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகப் போவதாக தகவல் கசிந்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.