good bad ugly movie shooting update
good bad ugly movie shooting update

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படக்குழு இன்னும் மௌனம் காத்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அஜித் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஸ்ரீலீலா, சுனில் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஸ்பெயின்க்கு போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது குறிப்பாக இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.