Pa Ranjith Father
இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pa.Ranjith Father Death : தமிழ் சினிமாவில் அட்டகத்தி, காலா, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் பா.ரஞ்சித்.

இவருடைய தந்தையின் பெயர் பாண்டுரங்கன். 63 வயதாகும் இவர் உடல்நல குறைபாட்டால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் இவருக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை 2 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பா.ரஞ்சித் ரசிகர்கள் பலரும் அவரது தந்தையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இன்று மாலை 5 மணி அளவில் ரஞ்சித்தின் சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.