டான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Official Release Date of Don Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் மற்றும் அயலான் என இரண்டு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. டான் படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து தள்ளிப் போய் வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வரும் மார்ச் 25ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.