Simbu and Suseendhiran Movie Update
Simbu and Suseendhiran Movie Update

சிம்புவின் நடிப்பில் சிவப்பு ரோஜாக்கள் 2 படம் உருவாவதாக வெளியான தகவலுக்கு பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பதிலளித்துள்ளார்.

Official Clarification on Sivappu Rojakkal 2 : தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இமயமாக வலம் வருபவர் பாரதிராஜா. இவரது இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் நடிகர் கமலஹாசனுக்கு பதிலாக இந்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகின.

கமல்ஹாசன் இடத்தில் சிம்பு நடித்த இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என பாரதிராஜாவின் மகன் மனோஜ் தற்போது தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது டுவிட்டர் பதிவில் சிகப்பு ரோஜாக்கள் படம் இரண்டாம் பாகம் உருவாவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

ஒருவேளை அப்படி இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கினால் என்னிடமிருந்து அல்லது என் அப்பாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.