NKP Vs Darbar Update : Rajinikanth, nayanthara, Nerkonda Paarvai, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, AR.Murugadoss, Kollywood
மீண்டும் தல அஜித்துடன் ரஜினிகாந்த் மோத உள்ளார், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

NKP Vs Darbar Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தல அஜித்தும் கடந்த பொங்கல் அன்று நேருக்கு நேர் மோதி கொண்டனர்.

இதனையடுத்து தற்போது இவர்கள் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படமும் தர்பார் திரைப்படமும் உருவாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு அகலாதே என்ற பாடல் மூன்றாவது சிங்கிள் டிராக் பாடலாக வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைக்க ரஜினி இயக்குனர் தான் காரணம் – ஏன் தெரியுமா?

இந்நிலையில் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் அதிரடியாகா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இன்று மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் இன்று மாலை அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே மீண்டும் ஓர் மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.