Nivetha Thomas About Her Marriage

தனக்கு வரப் போற புருஷன் எப்படி இருக்கணும் என சில கண்டிஷன்களை கூறியுள்ளார் நிவேதா தாமஸ்.

Nivetha Thomas About Her Marriage : சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தெலுங்கு படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வருபவர் நிவேதா தாமஸ்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஜில்லா திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வரும் நிவேதா தாமஸ் தன்னுடைய திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தனக்கு வரப்போகும் கணவர் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

தன்னுடைய கணவர் அதிகமாக பயணம் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும். எந்த விசயமாக இருந்தாலும் முதுகுக்குப் பின்னால் பேசாமல் முகத்துக்கு நேராக பேசுவதாக இருக்க வேண்டும்.

அவர் தனக்கு கணவர் என்பவர் என்பதை உணர்ந்து நடக்க வேண்டும். இவையெல்லாம் நிச்சயமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தனக்கு தற்போது திருமணம் ஈடுபாடு இல்லை. இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றுகிறதோ அப்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.