விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை முதல் முறையாக தனுஷுடன் ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
D40 Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ், இவரது நடிப்பில் கிட்டத்தட்ட நான்கு ஐந்து படங்கள் உருவாக உள்ளன.
அதில் ஒரு படமான D 40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போது இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நித்யா மேனன் தனுஷுடன் ஜோடி சேருவது இதுவே முதல் முறை. விஜய்க்கு ஜோடியாக நடித்த மெர்சல் படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் கவர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.