Next Shooting Schedule of Valimai

வலிமை படம் பற்றி அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Next Shooting Schedule of Valimai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வலிமை படம் பற்றி வெளியான அதிரடி தகவல்.. அடுத்த கட்ட ஷூட்டிங் எங்கே தெரியுமா??

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படியான நிலையில் தற்போது வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சுவிட்சர்லாந்து செல்ல இருந்தார்கள்.

ஆனால் தற்போதைய கொரானா பரவல் சூழ்நிலை காரணமாக இந்தியாவிலேயே படப்பிடிப்பை நடத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக படக்குழு டெல்லியை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.