New Show in Zee Network

பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு போட்டியாக புதிய நிகழ்ச்சி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

New Show in Zee Network : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.

ஐந்தாவது சீசன் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மலையாளத்தில் மோகன்லால் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சூப்பர் ஸ்டார் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

தற்போது இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் நிர்வாண மும்பையில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புதிய நிகழ்ச்சி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதாவது 100 நாள் ஒரு தீவில் தங்க வைக்கப்பட்டு 100 நாட்கள் தாக்குப் பிடிப்பவர்களுக்கு மிகப்பெரிய தொகையை பரிசாக அளிப்பதுதான் இதன் நிகழ்ச்சி.

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக தென்னாப்பிரிக்கா அருகே ஒரு தீவை வாடகைக்கு எடுத்து இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஒரு தீவில் 100 நாட்கள் என்பதால் இது பிக்பாஸ் நிகழ்ச்சி காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.