இது எங்க பட கதை என மாநாடு படக்குழுவினருக்கு கொரிய படக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

New Issue for Maanadu Team : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இது எங்க பட கதை.. மாநாடு படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிறுவனம் - ரசிகர்கள் அதிர்ச்சி

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை A Day என்ற கொரிய படத்தினை போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் தற்போது இந்த படக்குழு மாநாடு படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாநாடு படக்குழு எந்தவித நோட்டீஸூம் வரவில்லை என விளக்கம் அளித்துள்ளது.