நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

Netrikann Trailer Records : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நெற்றிக்கண். அவள் என்ற திகில் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக முதல்முறையாக இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சாதனை படைக்கும் நெற்றிக்கண் ட்ரைலர்.. எடிட்டிங்கால் மிரளவைத்த லாரன்ஸ் கிஷோர்.!!

படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிகர் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் யூடியூபில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. பார்ப்போரை நடுநடுங்க வைக்கும் வகையில் திகில் கலந்த ட்ரைலராக வெளியாகி உள்ளது.

சுதந்திர தின விழா : சென்னையில், ரூ.1.83 கோடியில் நினைவுத்தூண்..

இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து இருப்பவர் லாரன்ஸ் கிஷோர். அவள், சிறு, ராவணன் கோட்டம், தேன் உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ள இவர் இந்த படத்திற்கு நேர்த்தியான எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் டிரெய்லரில் அவருடைய அர்ப்பணிப்பு அவ்வளவு அழகாக தெரிகிறது.

மீண்டும் OTT-க்கு செல்லும் சூர்யாவின் படம் – வெளியான SHOCKING Update.! | Pa.Ranjith | Latest News HD

ட்ரைலரைப் பார்த்த பலரும் அதன் எடிட்டிங் நுட்பங்களை பாராட்டி வருகின்றனர்.