தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்குகிறார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Nelson And Rajini Combo Secrets : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து உருவாகும் தலைவர் 169 படத்தை இயக்குகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நெல்சன் முதல் முறையாக இயக்குகிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அவர் இதற்கு முன்னதாகவே ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றி உள்ளார் என்ற விஷயம் தெரியுமா. ?

சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னர் நெல்சன் திலீப் குமார் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். அப்படி பல பிரமாண்ட விருது விழாக்களையும் இவர் இயக்கியுள்ளார். விஜய் சிவகார்த்திகேயன் ரஜினி காந்த் என மூவரும் மேடையில் ஒன்றாக நின்று பேசிய விருது விழா நிகழ்ச்சியை இயக்கியவர் இவர்தான் என தற்போது தெரியவந்துள்ளது.

இவரால் மேடையில் ஒன்றாக தளபதி விஜய் சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த் நின்றனர். தற்போது இவர்கள் மூவரையும் இயக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார் நெல்சன். ரஜினியை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.